அமெரிக்க வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் இண்டியானவின் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உணவு விடுதிகள் அமைந்த பகுதியில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து அப்பகுதியில் துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டு வந்த மற்றொரு நபர் அந்த மர்ம நபரை நோக்கி சுட்டார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கிரீன்வுட் மேயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரீன்வுட் வணிக வளாகத்தில் மர்ம நபர்களால் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கிரீன்வுட் பகுதி போலீசார் உடனடியாக விரைந்து சென்று நிலைமையை கட்டக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். வேறு எந்தவித அச்சுறுத்தலும். இந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிசூடு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கடந்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கிக்களை வைத்திருப்பதற்கான அனுமதிக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதிக்கும் மசோதாவிற்று அதிபர் ஜோபடைன் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.