ஹாலிவுட்டில் கடந்த மே 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அப்சஷன்’. கரி பார்க்கர் இயக்கி இருந்த இப்படம் வெறும் ரூ. 8 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ. ₹3,207 கோடி வரை வசூலித்துள்ளது. இந்தியா பாக்ஸ் ஆபீசிலும் சக்கை போடு போட்ட ‘அப்சஷன்’ ரூ. 79 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது.

இசைக்கருவிக் கடை ஊழியரான பேரை பைத்தியமாக விரும்பும் நிக்கியின் காதலே சைக்கலாஜிக்கல் திகில் படமான அப்சஷனின் கதை.

படத்தில் நிக்கியாக நடித்திருந்த இந்தே நவரெட்டின் நடிப்பு திகிலூட்டும் விதமாக அமைந்திருந்து. அப்சஷனின் வெற்றி அவரின் திரைப்பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் காம்பிளக்ஸ் இதழிற்கு நடிகை இந்தே நவரெட் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
‘அப்செஷன்’ வெளியான பிறகு ஒன்றரை வருடங்களுக்கு எனக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நான் பல ஆடிஷன்களில் கலந்துகொண்டேன். ஆனால் எதுவும் கைகூடவில்லை. வாடகை செலுத்துவதற்காக நாய்களை நடைப்பயிற்சிக்கு நான் அழைத்துச் சென்றேன், லைவ் ஸ்ட்ரீமிங் செய்தேன், என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். வீடியோ கேம்ஸ் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நண்பர்களை உருவாக்கிக்கொள்வது எனக்கு எப்போதும் மிகவும் கடினமாகவே இருந்தது. என்று அவர் கூறினார்.




