முக்கியச் செய்திகள் தமிழகம்

மகனுக்கு அவசரமாக அமைச்சர் பதவி; அதற்கான அவசியம் என்ன? -டி.டி.வி.தினகரன் கேள்வி

அப்பா முதல்வராக உள்ள போது அவசரமாக மகனை அமைச்சராக்கியுள்ளார். அதற்கான அவசியம் என்ன என டி டிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் கட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர்
செய்தியாளர்களை சந்தித்த டி டிவி தினகரன்,  சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராவது தவறில்லை. அதேசமயம் அப்பா முதல்வராக உள்ள போது அவசரமாக மகனை அமைச்சராக்கியுள்ளார். அதற்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கருணாநிதி முதல்வராக உள்ளபோது ஸ்டாலினை உடனடியாக அமைச்சராக்கவில்லை. உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் ஆகி ஒன்றரை ஆண்டுகள் தான் ஆகியுள்ளது
இந்நிலையில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பது பார்ப்போம் எனக் கூறினார்.

ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒன்று செய்வது ஒன்று.  அடுத்தவர்கள் தயாரிக்கும் படத்தை ரெட் ஜெயிண்ட் தலையிடமால் சுதந்திரமாக வெளியிட விடுவதுதான் திரைத்துறைக்கு அவர் செய்யும் மிகப்பெரிய உதவி.  அம்மாவின் கட்சியை சுயநலத்திற்காக வட்டார கட்சியாக மாற்றிவிட்டனர். மக்கள் பாதிக்கிற அரசாங்கத்தின் வரிவிதிப்பு போன்றவற்றை எதிர்த்து போராடாமல் நம் இருப்பை காட்டுவதற்காக பழனிச்சாமி கம்பெனி செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.

ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பழனிச்சாமியிடம் தான் கேட்க வேண்டும்.
இதே நிலை இனியும் தொடர்ந்தால் அதிமுக கட்சி காணாமல் போயிவிடும். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியிட்டு போட்டியிடுவோம் எனக்குறிப்பிட்டார்.

தமிழகத்தை பொறுத்த வரை விடியல் ஆட்சி என்ற பெயரில் விடியா மூஞ்சி ஆட்சி
தொடர்கிறது. மேலும் ஆளுநர் தலையீடு குறித்த கேள்விக்கு இது போன்ற ஆட்சிக்கு கடிவாளம் மிக்க கவர்னர் செயல்படுவது சரிதானோ என தோன்றுகிறது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்ற தாய் தந்தை!

Halley Karthik

உழவர் சந்தைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Gayathri Venkatesan

14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி!

Saravana