வன்முறையை கட்டுப்படுத்த வலியுறுத்தல் : சென்னையில் மணிப்பூர் மக்கள் போராட்டம்!

மணிப்பூரில் நிலவி வரும் வன்முறையை கட்டுப்படுத்த வலியுறுத்தி சென்னையில் மணிப்பூர் மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு  பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.…

மணிப்பூரில் நிலவி வரும் வன்முறையை கட்டுப்படுத்த வலியுறுத்தி சென்னையில் மணிப்பூர் மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு  பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வெடித்த மோதல் பெரும் வன்முறையாக மாறியது.

இதனையடுத்து சுமார் 85 நாட்களாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் மணிப்பூருக்கு சென்று, அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசினர். மேலும் கோரிக்கை மனுவை மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவிடம் வழங்கினர்.

இந்நிலையில், மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த கோரியும், வன்முறை கும்பலால் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சென்னையில் குக்கி சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையை கட்டுப்படுத்த கோரி கோஷம் எழுப்பினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.