நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பில் ஈடுபடும், காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, தகுந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தேர்தல் தொடர்பான் பிரச்சனைகள் நிலவும் பகுதிகளுக்கு விரைந்து சென்று தீர்வு காணும் வகையில் 846 அதிரடிப்படைகள் (QRT) அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத மதுபான விற்பனை, ஆயுதங்கள் கடத்துவது, மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு சம்பந்தமில்லாத நபர்கள் வருவதை தடுக்கும் பொருட்டு 455 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு. 24/7 வாகன சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் வகையில், நாலுக்கா மற்றும் ஆயுதப்படையிளை சேர்ந்த 17,788 காவல் அதிகாரிகளும், 71,074 ஆனி மற்றும் பெண் காவலர்களும், தமிழ்நாடு சிறப்பு படையினை சேர்ந்த 9,020 காவலர்கள் உள்ளிட்ட 97,882 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 12,321 ஊர்க்காவல்படையினரும், 2,870 முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற காவல்ர்கள் என மொத்தம் 1,13,073 காவலர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் தொடர்பான தகவல்களை தெரிவிக்க பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








