உதகையில் பல்வேறு வசதிகளுடன் படகு இல்லம் – சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு 30 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில், கணினி அறிவியல்துறை வகுப்பறையை இன்று சுற்றுலாத்துறை…

நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு 30 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில், கணினி அறிவியல்துறை வகுப்பறையை இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி, ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருவதாகவும், உதகை படகு இல்லத்தில் மரத்திலான தங்கும் விடுதிகள், சாகச விளையாட்டுகள், போன்ற பல்வேறு வசதிகளுடன் படகு இல்லம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு 22 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாக கூறிய அவர், இந்த ஆண்டு 30 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்

– அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.