உ.பி புத்தேல்கண்ட் விரைவுச் சாலை திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
296 கிலோமீட்டர் நீளமுள்ள உ.பி புத்தேல்கண்ட் நான்குவழி விரைவுச் சாலை, 14,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, நான்கு வழிச் சாலையாக இருந்தாலும் எதிர்காலத்தில் ஆறு வழிச் சாலையாக மாற்றும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ’ஆக்ரா – லக்னோ விரைவுச்சாலையுடன் இணைக்கும் வகையில் இந்த சாலை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது
உத்தரப் பிரதேசத்தின் முக்கியமான மாவட்டங்களான சித்ரகூட், பந்தா, மகோபா, ஹமிர்பூர், ஜலான், அவுரையா, எட்டாவா ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக இந்த விரைவு சாலை செல்கிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தத் திட்டம் இருபத்தி எட்டு மாதங்களில் நிறைவடைந்துள்ளது.
அண்மைச் செய்தி: ‘கடவுள் செய்யாததை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தியுள்ளார்- அமைச்சர்’
இந்த விழாவில் பேசிய பிரதமர், புந்தேல்கண்ட் எண்ணற்ற வீரர்களை உருவாக்கிய பூமி இந்த நிலத்திற்கு இந்த அதிவேக நெடுஞ்சாலையைப் பரிசாக வழங்குவதில் தான் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். மேலும், இந்த விரைவு சாலையின் மூலம் சித்திர கூட்டிலிருந்து டெல்லிக்கு வரக்கூடிய நேரம் 3 முதல் 4 மணி நேரம் வரை குறையும் எனவும், முழு பிராந்தியத்தையும் தொழில்துறையில் முன்னேற்றம் அடைய இந்த நெடுஞ்சாலை பேருதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.








