திமுக பகுதிக்கழக தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு

திமுக பகுதிக்கழகத் தேர்தலுக்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். திமுகவில் 15வது உட்கட்சி தேர்தல் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டங்களாக இந்த தேர்தல்…

திமுக பகுதிக்கழகத் தேர்தலுக்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

திமுகவில் 15வது உட்கட்சி தேர்தல் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டங்களாக இந்த தேர்தல் நடத்தப்பட்டு வருகிநது. அதன்படி மாவட்டங்களுக்குட்பட்ட மாநகரத்தில் அடங்கியுள்ள பகுதிக் கழகத்திற்கான அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் துணைச் செயலாளர்கள் மூவரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பகுதிக் கழகத்திற்குட்பட்ட வட்டங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்டப் பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் வேட்பு மனுக்களை,  மாவட்டக் கழகத்திலோ அல்லது தலைமைக் கழக பிரதிநிதியிடமோ பெற்று, முறைப்படி வேட்புமனுவினை பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணத்துடன் 21-7-2022 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள்ளாக தலைமைக் கழகப் பிரதிநிதியிடம் தாக்கல் செய்து இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.