‘காவலர்களுக்கு அரசு சார்பில் எந்த விதமான அழுத்தமும் கொடுக்கப்படுவது இல்லை’

தமிழ்நாடு சிறைச்சாலைகளில் பணியாற்றும் காவலர்களுக்கு அரசு சார்பில் எந்த விதமான பணிச்சுமையோ மனச்சுமையோ கொடுக்கப்படுவது இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் கழகம் சார்பாக தொல்லியல் கழகத்தின் 30 ஆவது…

தமிழ்நாடு சிறைச்சாலைகளில் பணியாற்றும் காவலர்களுக்கு அரசு சார்பில் எந்த விதமான பணிச்சுமையோ மனச்சுமையோ கொடுக்கப்படுவது இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் கழகம் சார்பாக தொல்லியல் கழகத்தின் 30 ஆவது கருத்தரங்கம் மற்றும் ஆவணம் வெளியீட்டு விழா இன்று மற்றும் நாளை புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எம்எல்ஏ முத்து ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சங்க கால நாணயங்கள், கல்வெட்டுகள், உலக நாடுகளின் 100 ரூபாய் நோட்டுகள் பண்டைய நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் தொல்லியல் கழகம் சார்பாகக் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு விதமான பொக்கிஷங்கள் ஆகியவை ஆவணப்படுத்தப்பட்டிருந்தது. கண்காட்சியில் பவள கற்கள், பானைகள், ஓலைச்சுவடிகள், பண்டைய காலத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘கடவுள் செய்யாததை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தியுள்ளார்- அமைச்சர்’

விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி பண்டைய நாகரிகத்தினை வெளிகொண்டுவரும் வகையில் தான் தமிழ்நாடு அரசு கீழடி, கொந்தகை உள்ளிட்ட பல்வேறு விதமான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும்,அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்படும் பொருட்களை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து உலகம் முழுவதும் தமிழர் பண்பாடுகளை எடுத்துச் செல்ல கூறி வருவதாகத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாடு சிறைச்சாலைகளில் பணியாற்றும் காவலர்களுக்கு சிறைத்துறை சார்பில் எந்தவிதமான பணிச் சுமையோ மனச்சுமையோ கொடுப்பது கிடையாது எனவும், அவர்கள் சுதந்திரமாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்த அவர், கோவை சிறைச்சாலையில் காவலர் ஒருவர் உயிரை மாய்த்துக்  கொண்டது குடும்பப் பிரச்சினையாக இருக்கலாம் எனக் கூறினார். மேலும், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தான் காவலர் உயிரை மாய்த்துக் கொண்டதாக முதல் கட்ட தகவல் வந்துள்ளது எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.