முக்கியச் செய்திகள் இந்தியா

உ.பி சட்டப்பேரவைத் தேர்தல்: முதலமைச்சர் வேட்பாளர் யார்? – பிரியங்கா காந்தி சூசகம்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் தாம் தான் என பிரியங்கா காந்தி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், அக்கட்சியின் உத்தரப்பிரதேச பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வத்ராவும் அதனை வெளியிட்டனர். இதனையடுத்து பிரியங்கா காந்தி வத்ரா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தம்மை தவிர வேறு யாராவது தெரிகிறார்களா என பிரியங்கா காந்தி வத்ரா பதில் அளித்தார். மேலும், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசின் முகமாக தமது முகம்தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

கலைவாணர் அரங்கில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு!

Halley Karthik

’திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்து விட்டார்’: எம்.பி மீது தொழிலதிபர் பரபரப்பு புகார்!

Ezhilarasan

திரைப்படமாகும் மிதாலி ராஜ் வாழ்க்கை

Saravana Kumar