முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாடு: 30 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதியதாக, 29,870 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21,684 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,87,358 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று 7,520 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்றைய தினம் 7,038 ஆகக் குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 3,653 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,250 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,248 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1,016 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், 33 பேர் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் முகாம்!

Saravana Kumar

திருப்பத்தூரில் பள்ளி மாணவனை அலைக்கழித்த வங்கி மேலாளர்!

Saravana Kumar

47 பச்சிளம் குழந்தைகளுக்குப் பாதிப்பில்லை!