முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கம் – எங்கெல்லாம் தெரியுமா..?

நெல்லை – செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர், மதுரை – செங்கோட்டை இடையே வருகிற 1-ஆம் தேதி முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவில்லாத சிறப்பு…

நெல்லை – செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர், மதுரை – செங்கோட்டை இடையே வருகிற 1-ஆம் தேதி முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்களை இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை- செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் நெல்லையிலிருந்து காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு காலை 11.25 மணிக்குச் செங்கோட்டைச் செல்லும் எனவும், இதே மார்க்கத்தில் மற்றொரு ரயில், நெல்லையிலிருந்து மதியம் 1.50 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.15 மணிக்குச் செங்கோட்டைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘

அண்மைச் செய்தி: ‘சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் 117-வது பிறந்தநாள்; தலைவர்கள் மரியாதை’

இதேபோல, செங்கோட்டை – நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2.55 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு நெல்லை சென்றடையும் எனவும், இதே மார்க்கத்தில் மற்றொரு ரயில், செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு நெல்லை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன் மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.