’ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்கிற மொழிபெயர்ப்பு நாவலுக்காக மூத்த எழுத்தாளர் மாலனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் சாகித்திய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இதில் பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகும் படைப்புகளுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதுகளும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2021-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அக்காடமி விருது பெறும் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் மொழிக்கான விருது மூத்த எழுத்தாளர் மாலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கம் – எங்கெல்லாம் தெரியுமா..?’
https://twitter.com/mkstalin/status/1540904335160123393?s=21&t=evN2aiice-aITJ29WFFW0w
எழுத்தாளர் மாலனுக்கு பலதுறையைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக #SahityaAkademi விருது பெற்றுள்ள ஊடகவியலாளர் நாராயணன் (எ) மாலன் அவர்களுக்கு வாழ்த்துகள்! அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்!” எனக் கூறியுள்ளார்.








