திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தற்போது சட்டமன்றத்தில் உங்கள் அப்பாவிடம் கேளுங்கள், உங்கள் மாமாவிடம் சொல்லுங்கள் என பேசுகிறார்கள். இரண்டு கட்சிக்கும் சம்பந்தமில்லாதவர்கள் எனக்கு கண்டனம் பதிவிடுவார்கள்.
சிலர் ஜாதி மற்றும் மதம் தொடர்பாக பேசி வருகிறார்கள். ஒரு மோசமான சூழல் நிலவுகிறது. சட்டமன்றத்தில் நேரத்தை வீணடிக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் பல ஜாதி மதங்களைச் சார்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு சட்டமன்ற தலைவராக அப்பாவு இருந்து இருக்கிறார். ஒரு நாள் கூட அவர் கிறிஸ்துவர் என்று கூறியதில்லை. முதலமைச்சரும் சிறுபான்மையினர் அரசு என கூறுகிறார். சட்டமன்றத்தில் இது தேவையா?
அரசு அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக இருந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,
இந்த அரசிடம் எந்த ரகசியமும் இல்லை. முதலமைச்சர் வாய் திறந்து பேசவில்லை, பொதுக்கூட்டத்தில் பேசவில்லை, அதிகாரிகளை குறை சொல்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. தன்னுடைய திறமையின்மையை அதிகாரிகள் மீது பழி போடக்கூடாது.
பாஜகவை நேரடியாக எதிர்ப்பதாக அமைச்சர் அருண் ராஜ் கூறிய கருத்திற்கு, நாங்கள் என்ன கம்பு சண்டையா போட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் ஆட்சிக்கு வைகோ என்பது மதிப்பெண் கொடுத்துள்ளார் அது குறித்த கேள்விக்கு, நான் இந்த ஆட்சிக்கு மைனஸ் 80 சதவீதம் கொடுக்கிறேன். ஆளும் அரசு பொய் தொடர்பான ரீல்ஸ்களை பரப்பி வருவதாக இருந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,
தேவையில்லாத பொய் செய்திகள் இளம் தலைமுறையின் எதிர்காலத்தை பாதிக்கும். பால் விலைக்கு மூன்று ரூபாய் கொள்முதல் கட்டணம் அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்கு, மேலும் அதிகரிக்க வேண்டும்.
தனித்தொகுதிகளை மாற்ற வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை குறித்து கேள்விக்கு,
மனசு புண்படும் வகையில் இருந்தால் அதனை மாற்ற வேண்டும். மாற்றுவது நல்ல விஷயம் தான்
அரசு அவர்கள் கையில் உள்ளது. அவர்கள் தான் எல்லாம் செய்ய வேண்டும். தாமிரபரணி ஆறு சீரமைக்க ஆயிரம் கோடியின் ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அதனை மத்திய அரசுக்கு அனுப்பினால் அதனை பெற்று கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.




