மயிலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கிய மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பிய வழியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மயிலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கி, அங்குள்ள வியாபாரிகளுடன் கலந்துரையாடினார்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருநாள் பயணமாக நேற்று…

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பிய வழியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மயிலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கி, அங்குள்ள வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருநாள் பயணமாக நேற்று தமிழகம் வருகை தந்தார். அப்போது,  அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனநலம் குன்றிய சிறார்களுக்கான இல்லத்தை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரவு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மயிலாப்பூர் காய்கறி சந்தை அருகே காரைவிட்டு இறங்கிய மத்தியமைச்சர் அங்குள்ள சிறு, குறு காய்கறி வியாபாரிகளுடன் உரையாடினார்.

தொடர்ந்து அங்குள்ள காய்கறி வியாபாரிகளிடம் இருந்து மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறி வாங்கினார். இந்த காணொளியை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.