மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள்- பிரதமர் வாழ்த்து

மத்திய அமைச்சர் எல்.முருகனின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது 44வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.…

மத்திய அமைச்சர் எல்.முருகனின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது 44வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடி விடுத்த பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், “அயராத முயற்சி, எல்லையற்ற ஆற்றல் மற்றும் உறுதியான உறுதியுடன் புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப நீங்கள் தொடர்ந்து பாடுபடுகிறீர்கள்.

பிறந்தநாள் என்பது வாழ்க்கையின் பொருத்தத்தைப் பார்க்கவும், மதிப்பிடவும் ஒரு சிறப்பான சந்தர்ப்பம். குடும்பம், சமூகம் மற்றும் தேசம் ஆகியவற்றிற்கான நமது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் நம்மை மீண்டும் அர்ப்பணிக்க இது நம்மை ஊக்குவிக்கிறது. தேசத்தின் வளர்ச்சி மற்றும் செழுமைக்காக நீங்கள் உழைக்கும் அர்ப்பணிப்பு குறிப்பாக இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கிறது.

https://twitter.com/Murugan_MoS/status/1530765939477602304?t=TRkpv-6R8504AOjm6XgBKw&s=08

 

நீங்கள் தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். ஒளிமயமான எதிர்காலத்திற்கும், இனிவரும் காலங்களில் உங்கள் முயற்சிக்கும் வாழ்த்துக்கள் என தெவிரித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை தனது வாழ்த்து செய்தியில், “மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு,தாங்கள் பூரண உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்”என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்! என தெரிவித்துள்ளார்.

இதேபோல் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்சி, மீனாட்சி லேகி, பிரகலாத் சிங் படேல் மற்றும் பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.