முக்கியச் செய்திகள் தமிழகம்

பட்டியலினத்தைச் சேர்ந்த அதிகமானோர் மத்திய அமைச்சர்களாக நியமனம்: எல்.முருகன்

எளிமையான பின்புலம் கொண்ட பட்டியலினத்தைச் சேர்ந்த அதிகமானோர் மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். 
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் வகையில் கொங்கு மண்டலத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மக்கள் ஆசி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் 3ஆவது நாளாக நேற்று நாமக்கல் மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்ட எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
யாத்திரையில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த தனக்கு, உயர்ந்த அமைச்சர் பதவியை பிரதமர் மோடி வழங்கியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். எளிமையான பின்புலம் கொண்ட பட்டியலினத்தைச் சேர்ந்த அதிகமானோர், மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.
இதையடுத்து, ராசிபுரத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசு சாதாரண மக்கள் அங்கம் வகிக்கின்ற அரசு எனக் குறிப்பிட்டார். ஏழை, எளிய மாணவர்களுக்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவித்தொகையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு வழங்கியுள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
Advertisement:
SHARE

Related posts

அத்தை மகள்கள் பிடிவாதம்: ஒரே நேரத்தில் 2 பேரை மணந்த இளைஞர்!

Gayathri Venkatesan

4 மாதமாக ஊதியம் வழங்காததால் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

Jeba Arul Robinson

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட்: நியூசி. கேப்டன் வில்லியம்சன் டவுட்!

Ezhilarasan