முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா அதிகரிக்காமல் தடுக்க நடவடிக்கை: முதலமைச்சருக்கு பன்னீர்செல்வம் வேண்டுகோள்

பண்டிகை காலத்திற்கு பின்பு கொரோனா அதிகரிக்காமல் இருக்கவும் , குறிப்பிட்ட பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நேற்றைய தினத்தில் 1,112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர், மேலும் 14 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மேலும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் பண்டிகை காலங்களில் கொரோனா அதிகரிக்காமல் இருக்க சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: “ தமிழ்நாட்டில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, கொரோனா தொற்று நோயின் தாக்கம் குறைந்து வருகிறது. தொற்று குறைவதால், தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் இருப்பினும் விதிகளை மீறி பட்டாசு கடைகளிலும் , ஜவுளிக்கடைகளில் கூட்டம் கூடுவதை பார்க்க முடிகிறது. துர்கா பூஜை, நவராத்திரி விழா போன்ற பண்டிகைகளுகுப் பிறகு மேற்கு வங்காளம், அசாம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிகப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் கொரோனா நோய்த் தொற்று ஆரம்பிக்கப்பட்ட சீனாவில் தற்போது நோய்த் தொற்று அதிகரித்து வருவதாக பத்திரிக்கை செய்திகள் வருகின்றன.

மற்ற மாவட்டங்களைப்போல் பண்டிகை காலத்திற்கு பிறகு கொரோனா அதிகரிக்காமல் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், இது குறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மூதாட்டியிடம் திருடிய இளைஞரை அடித்துக்கொன்ற ஊர்மக்கள்

Janani

தனி அமைச்சகம்: முதலமைச்சருக்கு அன்புமணி கோரிக்கை

EZHILARASAN D

‘தோன்றினால் மறைவது இயற்கை’

Jayakarthi