முக்கியச் செய்திகள் இந்தியா

அவசர கால பயன்பாட்டிற்காக வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் அவசரகால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில், கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அவசர கால பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. கொரோனா நோய் பரவலைக் விரைவாக கட்டுப்படுத்த தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் காரணமாக மாடர்னா, ஃபைசர், ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய அமெரிக்காவைச் சேர்ந்த முன்னனி நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

‘டிக்கிலோனா’ – சந்தானத்திற்கு கண்டனம்

Halley karthi

கேரள காங்கிரசின் முன்னாள் எம்.பி கட்சியிலிருந்து விலகல்!

Halley karthi

போலீசுக்கு சவால் விட்ட நடிகை மீரா மிதுன் கேரளாவில் கைது

Gayathri Venkatesan