சட்டமேதை அம்பேத்கரின் 130 பிறந்தநாளை, காங்கிரஸ் கட்சியினர் நள்ளிரவு 12 மணியளவில் கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை அம்பேத்கரின் 130வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு, நள்ளிரவு 12 மணியளவில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், கேக் வெட்டிய அவர்கள், அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு கேக்கினை விநியோகம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சென்னை காங்கிரஸ் கட்சி நிர்வாகி ரஞ்சன்குமார், தமிழகத்தின் இன்றைய நிலையில் அம்பேத்கரின் தேவை அவசியம் என்பதால் பாகுபாடின்றி அனைவரும் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்தார். இதனை வலியுறுத்தவே நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடியதாகவும் அவர் கூறினார்.







