மத்திய பட்ஜெட் 2026 : நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்?

செமி கண்டக்டர் துறைக்காக 40,000 கோடி ஒதுக்கீடு செய்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2026 – 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது, நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பை ஊட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், மருந்து தயாரிப்பு துறைக்காக 10000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதன் மூலமாக பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்படும்.

செமி கண்டக்டர் துறைக்காக 40,000 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் அரிய வகை கனிமங்களை எடுப்பதற்கான மையங்கள் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டை போலவே ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அமைக்கப்படும்.

உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இயந்திரங்கள் தயாரிப்புக்க 10,000 கோடி ஒதுக்கீடு.

சுரங்கங்கள் மெட்ரோ வழித்தடங்கள் போன்றவற்றை அமைப்பதற்கான உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் புதிய திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.

காதி, கைத்தறி கைவினைப் பொருட்களை வலுப்படுத்த ‘மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.

சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நுண் சிறுகுறு தொழில்துறையை மேம்படுத்த மும்முனை திட்டம் அறிமுகம். புதிய திட்டத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

தரம் மிகுந்த விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கப்படும்.

மூலதன செலவு ஒதுக்கீடு 12.2 லட்சம் கோடியாக உயர்வு.

நீர்வழி முனையங்களை அமைப்பதற்கான புதிய திட்டம் அறிவிப்பு.

நீர்வழி மூலமாக முக்கிய துறைமுகங்களை இணைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என அனைத்து பிராந்தியங்களையும் இணைக்கும் வகையில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

சுற்றுலாத்துறைக்காக கடல் வழி விமான சேவைக்கும் நிதி ஒதுக்கீடு.

கடலோர போக்குவரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்தியேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும். இதன் மூலமாக உள்நாட்டின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

கட்டமைப்புகளை மேற்கொள்ளும் பொழுது ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான உறுதி நிதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 7 நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும்.

ஐதராபாத்- சென்னைக்கு, பெங்களூரு- சென்னைக்கு 7 அதிவேக ரயில் வழித்தடங்கல் உருவாக்கப்படும்.

அடுத்து ஐந்து ஆண்டுகளில் 20 புதிய நீர் வழி தடங்கள்(Water ways) அமைக்கப்படும்.

கோயில் நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.