இந்தியா செய்திகள்

கட்டுப்பாடற்ற பேச்சுக்கு அவையில் அனுமதியில்லை – ஜகதீப் தன்கர்

கட்டுப்பாடற்ற பேச்சுகளை அவையில் அனுமதிக்க முடியாது என்று மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கா் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வு இன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில், மாநிலங்களவை சுமூகமாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் அழைப்பின்பேரில், அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இக்கூட்டத்தில், மாநிலங்களவை பாஜக குழுத் தலைவா் பியூஷ் கோயல், காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், திமுக சார்பில் எம்.சண்முகம், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், சமாஜ்வாதி சார்பில் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்றனர். கூட்டத்தில், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து தன்கா் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள பேச்சுரிமையின் பெயரில் உறுப்பினா்களின் கட்டுப்பாடற்ற பேச்சுகளை அவையில் அனுமதிக்க முடியாது என்பதை தன்கா் அரசியல் கட்சிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம், நாடாளுமன்ற குழுக்களில் தன்கரின் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு கட்சிகள் கேள்வி எழுப்பின.

இதையும் படிக்க: விமர்சனங்களை டைரி குறிப்பாக மாற்றி, பதில் சொல்கிறாரா கிங் கோலி?

அதற்கு பதிலளித்த தன்கர், மனிதவளத்தை திறம்பட பயன்படுத்துவதுடன், நாடாளுமன்றக் குழுக்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதே அந்த நடவடிக்கையின் ஒரே நோக்கம். மேலும், அந்த அதிகாரிகள், நாடாளுமன்றக் குழுக்களின் பங்கேற்பு உறுப்பினா்கள் இல்லை. குழுக்களுக்கு தேவையான ஆய்வு தகவல்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கவே அவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் கட்சிகள் முன்வைத்ததாகத் தெரிகிறது. தொடா்ந்து, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் தன்கா் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக, பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்கட்ட அமா்வின்போது, மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்த சில கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து தன்கா் நீக்கியது விமா்சனங்களுக்கு உள்ளாகியது.

பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தன்கா், கட்டுப்பாடற்ற பேச்சுகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் மூலம் மாநிலங்களவையை மல்யுத்த களமாக்க அனுமதிக்கமாட்டேன். அவையில் ஆதாரமற்ற, பொறுப்பற்ற கருத்துகளை உறுப்பினா்கள் தெரிவிக்கக் கூடாது என்று கூறியிருந்தாா்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து – 15 பேர் பலி

EZHILARASAN D

ஜிலேபிக்கு இப்படி ஒரு விளக்கமா ? வைரல் ஆன ஹோட்டல் மெனு

Web Editor

சசிகலா விடுதலையால் எந்த மாற்றமும் ஏற்படாது: ஜி.கே.வாசன்

Niruban Chakkaaravarthi