முக்கியச் செய்திகள் தமிழகம்

கணவர் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் விஷம் அருந்தி உயிரிழப்பு

கணவர் இறந்த 30வது நாளில் அவரின் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் இருவரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சிதம்பரம். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 30 தினங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் . இவரது மனைவி சுபா, இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். மகன் படித்து முடித்து வீட்டில் இருந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சிதம்பரம் உயிரிழந்த துக்கத்தில் கடந்த ஒரு மாத காலமாக தாய் மற்றும் மகன் மிகவும் சோகத்தில் இருந்துள்ளனர். அவரது மனைவி சுபா மற்றும் மகன் முரளி பாரதி கணவரின் 30வது நாள் நினைவு தினத்தை அனுசரித்துவிட்டு துக்கம் தாங்க முடியாமல் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அக்கம்பக்கத்தினர் கதவு திறந்து நிலையில், இருவரும் வீழ்ந்து கிடந்ததை கண்டு சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாய் மகன் இருவரும் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என தனித்தனியே கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தாய் மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சாத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உயிரை மாய்த்து கொள்ளும் துயரம்; இரண்டாம் இடத்தில் தமிழகம்

Sugitha KS

குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா.. தடுப்பூசி எடுத்துக் கொள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி கோரிக்கை

Halley Karthik

பவானிபூா் தொகுதியில் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்

EZHILARASAN D