“அம்பயர்கள் விளையாடக் கூடாத இடத்தில் விளையாடுகின்றனர்”

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் பல போட்டிகளின் போது வீரர்களுக்கும், அம்பயர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல் குறித்து முன்னாள் நியூசிலாந்து அணி வீரர் கருத்து தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மாதம்…

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் பல போட்டிகளின் போது வீரர்களுக்கும், அம்பயர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல் குறித்து முன்னாள் நியூசிலாந்து அணி வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மாதம் துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நடந்து முடிந்த பல தொடர்களில் சுவாரஸ்ய நிகழ்வுகள் பல அரங்கேறியிருந்தாலும் நடப்பு ஐபிஎல் தொடரின் நிகழ்வுகள் ரசிகர்களிடையே முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. முக்கியமாக அம்பயர்களின் முடிவுகளில் தொடர் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. சொர்ப்பான ரன்களில் பெறப்படும் அணிகளின் வெற்றியும் உண்மையில் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

குறிப்பாக, சமீபத்திய போட்டி ஒன்றில் மோதிய டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியின் இறுதியில் டெல்லி வீரர்கள் தொடர்ந்து சிக்சர்களை வீசத்தொடங்கியபோது பந்துவீச்சாளரின் ஒரு பந்து பேட்ஸ்மேனின் நெஞ்சு உயரத்துக்கு ஃபுல் டாசாக போடப்பட்டது. அப்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் அந்த பந்தை நோ பால் என நினைத்தபோது, அம்பயரோ நோ பால் இல்லை என்று அறிவித்தார். வெற்றியை நோக்கி சிக்ஸர்களை விலாசிய டெல்லி அணியினருக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக மாறியது. இதனால் ஆவேசப்பட்ட டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்ஸ்மேன்களை வெளியேறும் படி அழைத்தார். மேலும் டெல்லி அணியின் பயிற்சியாளர் பிரவீன் அம்யர்களோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்வு ஐபிஎல் ரசிகர்களிடம் முக்கிய கவனத்தை பெற்றது.

மேலும் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்த போட்டியில் ரிஷப் பண்டின் கோபம் குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் வீரர்களுக்கும், அம்பயர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல் குறித்து முன்னாள் நியூசிலாந்து அணி வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

“ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக அம்பயர்கள் தவறு செய்வதை நாம் பார்க்கிறோம். ஒயிட் பால் மற்றும் நோ பால் போன்றவற்றை களத்தில் இருக்கும் வீரர்கள் தீர்மாணிப்பது சரியாக இருக்கும். போட்டிகளில் அம்பயர்கள் மற்றும் வீரர்கள் இடையே நிகழும் இத்தகைய சம்பவங்கள் பேசவேண்டிய முக்கியமான விவாதங்கள், ஒயிட் மற்றும் நோ பால்கள் மீது வீரர்களின் பார்வையே மேலானது. மற்ற நேரங்களை காட்டிலும் இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும் போது ஒயிட் பால்கள் முக்கியத்துவம் பெருகின்றன. விக்கெட் கீப்பரிடம் பந்து சென்றடைவதற்குள் அம்பயர்கள் அதனை ஒயிட் என்று அறிவிப்பதே முக்கிய தவறாக அமைகிறது. இது போன்ற சம்பவங்களும் ஆட்டத்தை தீர்மாணிக்கும் காரணிகளாக அமைகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து பேசியுள்ள நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஒருவர், “ஐபிஎல் போட்டிகளில் அம்பயர்கள் முக்கியத்துவம் பெற்றவர்களாக இருக்கின்றனர். ஆனால், அவர்கள் விளையாடக்கூடாத இடத்தில் விளையாடுகின்றனர். என்னைப் பொறுத்தவரை அம்பயர்களைவிட வீரர்களே சிறந்த நடுவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.