சென்னையை வீழ்த்திய கொல்கத்தா

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது  ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15வது ஐபிஎல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30…

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15வது ஐபிஎல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா அணி இன்று மோதின. மேலும், முதல் முறை ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணி, ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரிட்சையில் ஈடுபட்டது.


முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸின் துவக்க ஆட்டக்காரர்களாக ருத்துராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். முதல் ஓவரில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ருத்துராஜ் 4 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் உமேஷ் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


பின்பு அடுத்ததாக களமிறங்கிய உத்தப்பா அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. மறுமுனையில் கான்வே 3 ரன்களில் ஆட்டம் இழக்க. அதிரடி காட்டி வந்த உத்தப்பா, வருண் சக்கரவர்த்தி பந்தில் 28 ரன்களில் வெளியேறினார். அவரை பின்தொடர்ந்து ராயுடுவும் பெரிதும் ஜொலிக்காமல் 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இவர்களை அடுத்து களத்திற்கு வந்த டூபே, ரஸ்ஸல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.


11 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்களை இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் ஜடேஜாவும், முன்னாள் கேப்டன் தோனியும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இறுதியில், 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தனர். தோனி 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். மேலும், கேப்டனான ஜடேஜா 28 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.


132 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக ரகானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். ரகானேவின் அதிரடி ஆட்டத்தால் ஆரம்பம் முதலே கொல்கத்த அணி தனது ஆதிக்கத்தை செலுத்தியது. மறுபுறம் வெங்கடேஷ் ஐயர் 16, நிதிஷ் ராணா என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

1 சிக்ஸர் 6 போர்கள் என விளாசிய ரகானே 44 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில்லிங்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.இறுதியில் 18.3 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2022 ஐபிஎல் தொடரின் தளது முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.