குடையை ரெடியா வச்சிக்கோங்க… அடுத்த 6 நாட்களுக்கு கொட்ட போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது,

“தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

18-04-2025 மற்றும் 19.4.2025: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 10 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20-08-2025 முதல் 24-04-2025 வரை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் பதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு!

18-04-2025 முதல் 20-04-2025 வரை : தமிழ்நாட்டில் ஓரிகு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 27 செல்சியஸ் வரை உயரக்கூடும்.

21-04-2005 மற்றும் 22-04-2021: தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு

18-04-2025 : தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

18-04-2025 முதல் 22-04-2021 வரை வரை: தமிழ்நாட்டில் ஒருசில ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

18-04-2025 முதல் 20-04-2025 வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (18-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 – 36 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 – 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (19-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் வேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 – 37 டிகிரி செய்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

தமிழக கடலோரப்பகுதிகள்

18-04-2025 முதல் 21-08-2025 வரை – எச்சரிக்கை எதுமில்லை.

22-04-2025 : தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று
அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கக்கடல் பகுதிகள்& அரபிக்கடல் பகுதிகள்:

18-04-2025 முதல் 22-08-2025 வரை:  எச்சரிக்கை ஏதுமில்லை”

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.