உக்ரைன் போர்: வறுமையை சந்திக்கப்போகும் 90% மக்கள் – ஐநா எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் உக்ரேனிய மக்கள் தொகையில் தொண்ணூறு சதவிகிதம் வறுமையை எதிர்கொள்ள நேரிடும் என ஐநா வளர்ச்சித் திட்டம் எச்சரித்துள்ளது. உக்ரேனில் தொடர்ந்து அடுத்த ஆண்டும் போர் நீடித்தால், உக்ரேனியர்களில்…

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் உக்ரேனிய மக்கள் தொகையில் தொண்ணூறு சதவிகிதம் வறுமையை எதிர்கொள்ள நேரிடும் என ஐநா வளர்ச்சித் திட்டம் எச்சரித்துள்ளது.

உக்ரேனில் தொடர்ந்து அடுத்த ஆண்டும் போர் நீடித்தால், உக்ரேனியர்களில் 10 பேரில் ஒன்பது பேர் வறுமை மற்றும் கடுமையான பொருளாதார பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று ஐ.நா வளர்ச்சித் திட்டம் (UNDP) தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனின் 18 ஆண்டுகள் வரையிலான வளர்ச்சி ஆதாயங்கள் 12 முதல் 18 மாதங்களில் வெறுமனே அழிக்கப்படும் என்றும் நாங்கள் மதிப்பிடுகிறோம், என்று ஐ.நா வளர்ச்சித் திட்டத்தின் நிர்வாகி ஸ்டெய்னர் கூறினார்.

இது குறித்து, ஐ.நா வளர்ச்சித் திட்டத்தின் நிர்வாகி, பொருளாதாரம் வீழ்ச்சியடையும் மோசமான சூழ்நிலையைத் தவிர்க்க, கிவ் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக 2022 ஆம் ஆண்டில் உக்ரைனின் பொருளாதாரம் 10 சதவீதம் வரை சுருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் தற்போது நிலவும் இந்த போர் நீண்ட காலம் நீடித்தால் கடுமையான விளைவுகள் வரக்கூடும் என்றும் அந்நாட்டின் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

போரால் பெரும் இழப்புகளை சந்தித்து வரும் உக்ரைனியர்கள், ஐநாவின் இந்த எச்சரிக்கை மக்கள் மத்தியில் சோகத்டஹி ஏற்படுத்தியுள்ளது.

 

– Student Reporter 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.