ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் – 4 பேர் பலி

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் பலியாகின்றனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான போர் நடைபெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை எதிர்த்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. இரு நாடுகளுக்கும் போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ரஷ்யாவின் தென்மேற்கு சமாரா பகுதியில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்தான சமாரா ஆளுநரின் தகவலின்படி, ”நேற்று இரவு எதிரிகளின் ட்ரோன் தாக்குதலில் நான்கு பேர் பலியானதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ரஷ்யா வீசியது என்றும் அதில் மூன்று பேர் பலியானதாகவும் உக்ரைன் கூறியுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.