முக்கியச் செய்திகள் உலகம்

கொரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டினருக்கு இங்கிலாந்தில் நுழைய அனுமதி

இங்கிலாந்து அரசு வரும் ஜூலை 19-ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டில் தங்கியிருக்கும் அந்நாட்டு குடிமக்களை, நாட்டில் நுழைய அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதால், இங்கிலாந்து அரசு தொடர்ந்து தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் வரும் ஜூலை 19 ஆம் தேதி, தடுப்பூசி செலுத்திய அந்நாட்டு மக்கள், வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டவர்களும், இங்கிலாந்து வர அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் இங்கிலாந்து சுகாதார நிறுவனத்தின் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்கள் இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

கூடுதலாக மற்ற நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. மேலும் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவிருக்கும் யூரோ இறுதிப் போட்டிகளை காண்பதற்கு, இத்தாலி நாட்டை சேர்ந்த 1000 கால்பந்து ரசிகர்களை இங்கிலாந்து அரசு அனுமதித்துள்ளது. இந்த செயலை அந்நாட்டு மருத்துவ ஆய்வாளர்கள் கண்டித்துள்ளனர். மேலும் இந்த தளர்வுகள் கொரோனாவின் புதிய அலைகளை உருவாக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

கேஜிஎப்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

Halley karthi

பாமக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பல்!

Halley karthi

ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய அரசு பரிசீலனை: முதல்வர் பழனிசாமி

Niruban Chakkaaravarthi