வேஸ்ட் கண்டெய்னர் டூ அழகான வீடு – இங்கிலாந்து கலைஞருக்கு குவியும் பாராட்டு

வீணான கண்டெய்னரை அழகிய வீடாக இங்கிலாந்தைச் சேர்ந்த கலைஞர் ஹாரிசன் மார்ஷல். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இங்கிலாந்தில் தற்போது வீட்டு வாடகை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. குறிப்பாக மத்திய லண்டனில்…

வீணான கண்டெய்னரை அழகிய வீடாக இங்கிலாந்தைச் சேர்ந்த கலைஞர் ஹாரிசன் மார்ஷல். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இங்கிலாந்தில் தற்போது வீட்டு வாடகை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. குறிப்பாக மத்திய லண்டனில் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் மாற்று வழிகள் குறித்து மக்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர்.

இந்த சூழலில் லண்டனைச் சேர்ந்த ஹாரிசன் மார்ஷல் என்ற கலைஞர் வேஸ்ட் கண்டெயினரை அழகிய வீடாக மாற்றியுள்ளார். இந்த புகைப்படங்களை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீட்டின் முன்புறம் ‘ஸ்கிப் ஹவுஸ்’ என்று எழுதியுள்ளார். அதாவது மத்திய லண்டனில் ஓர் ஆண்டு வீட்டில் வாழ்வதை தவிர்த்துவிடுங்கள் என்று எழுதியுள்ளார்.

அண்மைச் செய்தி: ’நடிகர் விஜய் பற்றி ஒரே வார்த்தை’ – ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா

ஹாரிசன் மார்ஷல் காவுகின் ஸ்டியோ என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். டிசைன் தொடர்பான நிறுவனமாக இதுசெயல்பட்டு வருகிறது. வீணான மெட்டல் கண்டெயினரை வீடாக மாற்றியதற்கு ஹாரிசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.