வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பல புதிய படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறது. சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல், டான், திருசிற்றம்பலம், விக்ரம் போன்ற படங்களை வெளியிட்டது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் அடுத்த படம் என்ன என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் ஆர் எஸ் இன்போடைமெண்ட் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் இணைந்து விடுதலை படத்தை வழங்குகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உரவாகியுள்ள விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இத்திரைப்படம் ஏற்கனவே அதன் பிரம்மாண்டமான தயாரிப்பு, நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் திரை ஆரவலர்களிடையே பெரிய அளவினில் அலைகளை உருவாக்கியுள்ளது. மேலும் பல திரைப்படங்களுக்கு வெற்றியின் முகவரியாக மாறியிருக்கும் ரெட் ஜெயண்ட்ஸ் மூவீஸ் வெளியீடு என்பதால், விடுதலை திரைப்படமும் பெரும் வெற்றியாக அமையுமென தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமார் நம்புகிறார்.







