விநாயகருக்கும் ஆதார் அட்டையா?

ஜார்கண்ட் மாநிலத்தில் விநாயகருக்கு ஆதார் அட்டை வடிவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புது முயற்சியாக, விநாயகருக்காக ஒரு…

ஜார்கண்ட் மாநிலத்தில் விநாயகருக்கு ஆதார் அட்டை வடிவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புது முயற்சியாக, விநாயகருக்காக ஒரு பிரத்யேக ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அதில், விநாயகரின் முகவரி கைலாசம் என்றும் அவர் பிறந்த தேதி, ஆறாம் நூற்றாண்டு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய தந்தையின் பெயர் மகாதேவ் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும் முகவரியில், ‘கைலாச மலை, மேல்தளம், மானசரோவர் ஏரி அருகில், கைலாஷ், அஞ்சல் குறியீடு (PIN)- 000 001’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை தயாரித்தவர்கள், விநாயகருக்காக ஒரு பிரத்யேக ஆதார் எண்ணையும் உருவாக்கி இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை வடிவமைத்த ஷ்ரவ்குமார் கூறுகையில், ஒரு முறை நான் கொல்கத்தா சென்றிருந்த போது அங்கு விநாயகருக்கு பேஸ்புக் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த பின்பு விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது தனித்துவமான விநாயகர் பந்தல் ஒன்று வடிவமைக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதற்காக நான் ஆதார் அடையாள அட்டை வடிவில் பந்தல் அமைக்க திட்டமிட்டேன். இதன் மூலம் ஆதார் அடையாள அட்டையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூற முடியும் என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.