பதவி மீது ஆசையில்லை: உதயநிதி ஸ்டாலின்

‘எந்த பொறுக்கும் ஒருபோதும் நான் ஆசைப்படவில்லை’ என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் உள்ள காளப்பட்டியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட இளைஞரணி…

‘எந்த பொறுக்கும் ஒருபோதும் நான் ஆசைப்படவில்லை’ என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவையில் உள்ள காளப்பட்டியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். சுமார் ஆயிரம் பேர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் அமைச்சர் செந்தில் மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

விழாவின் போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது : ”கோயம்புத்தூர் மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை சில சமயங்களில் ஏமாற்றி விடுகிறீர்கள். கடந்த தேர்தலின்போது ஐந்து தொகுதியில் வெற்றிபெறுவோம் என நினைத்தேன். ஆனால் கோவையில் ஒரு தொகுதியில்கூட வெற்றிப்பெறவில்லை. மீண்டும் கோவை மக்கள் எங்களை ஏமாற்றி விடக்கூடாது. எந்த பொறுப்புக்கும் ஒருநாளும் ஆசைப்பட்டது கிடையாது. தலைவருக்கும் உங்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்” . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.