நூற்றாண்டு கடந்து தமிழ்ச்சமூகத்தை நல்லகண்ணு செறிவூட்டட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு இன்று 97-வது பிறந்த நாள் விழா…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு இன்று 97-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார்.

அங்கு நல்லகண்ணுக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோரும் நல்லகண்ணுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், நல்லக்கண்ணுவை இளைஞராகவே பார்க்கிறோம் என தெரிவித்தார். அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, வாழ்த்துகளை பெறுவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும், சமூக வலைத்தள பக்கங்களில், பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “பொதுவாழ்வில் தூய்மை, எளிமை ஆகியவற்றுக்கான குறிச்சொல்லாக மாறிவிட்ட மாபெரும் பொதுவுடைமைப் போராளி தோழர் நல்லக்கண்ணு அவர்களின் 97-ஆவது பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்கினேன். இன்னும் பல்லாண்டுகள் தம் சிந்தனைக்கொடையால் நம் தமிழ்ச்சமூகத்தை அவர் செறிவூட்டட்டும்!” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.