’உதய் அண்ணா’…அன்பாக அழைத்த மாற்றுத்திறனாளி பெண்: காரை நிறுத்தி குறையை கேட்ட உதயநிதி

சாலையில் நின்றபடி உதவிகோரிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்காக, காரை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின், அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற…

சாலையில் நின்றபடி உதவிகோரிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்காக, காரை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின், அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அவர் திறந்து வைக்க உதயநிதி ஸ்டாலின் சென்ற போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் வருவதை அறிந்து, அப்பகுதியில் மகளுடன் நின்ற மாற்றுத் திறனாளி பெண், அவரது காரை கண்டதும் உதய் அண்ணா என அழைத்தார். இதனைகேட்டு, காரை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின், மாற்றுத்திறனாளி பெண்ணிடம் மனுவை பெற்றுக் கொண்டு பிரச்னையை கேட்டறிந்தார். மேலும், கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.

தொடர்ந்து, கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 250 பேருக்கு, ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சேப்பாக்கம் தொகுதியில் தான் வெற்றிபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சந்திக்க தயார் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.