செவ்வாய் கிரகத்தில் தங்களது சுராங் ரோவர் தரை இறங்கும் வீடியோவை சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் வானிலை, சுற்றுச்சூழல் குறித்து ஆராய்வதற்காக சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சுராங் ரோவாரை அனுப்பியது. மே 21ம் தேதி அந்த ரோவர் தரையிரங்கியது. அப்போது பதிவான வீடியோவை வெளியிட்டுள்ளது. அதோடு, செவ்வாய் கிரகத்தின், உத்தோப்பியா பிளானீஷியா என்ற பகுதியில் சுராங் ரோவர் நகர்ந்து செல்லும் வீடியோவையும் சீன விண்வெளி ஆராய்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது







