தமிழ் நாடு சட்டமன்றத்தேர்தல் 2026-ல் திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சி ஆட்சியை இழந்து எதிர்கட்சியாகியுள்ளது.
அதே நேரம் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியுற்றார். இது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மறுபுறம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக கட்சியானது காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவின் மூலம் ஆட்சியமைத்துள்ளது. அக்கட்சியின் தலவைர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில் திமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது ;
மு. க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 07-05-2026 மாலை 5.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் திமுக சட்டமன்றக் கட்சியின தலைவராக திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களும், துணைத் தலைவராக திரு. கே.என்.நேரு அவர்களும், கொறடாவாக திரு எ.வ.வேலு அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்படப்பட்டுள்ளது.







