”திமுக ஆட்சி அமைய சபதமெடுப்போம்”- உதயநிதி ஸ்டாலின்!

இன்னும் மூன்று மாதத்தில் திமுக ஆட்சி அமைய சபதமெடுப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரை வில்லாபுரம் குடியிருப்பு பகுதியில் திமுக சார்பில் தமிழர் பண்பாட்டு திருவிழா என்ற தலைப்பில் சுமார் 2000க்கும் மேற்பட்ட…

இன்னும் மூன்று மாதத்தில் திமுக ஆட்சி அமைய சபதமெடுப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரை வில்லாபுரம் குடியிருப்பு பகுதியில் திமுக சார்பில் தமிழர் பண்பாட்டு திருவிழா என்ற தலைப்பில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கெடுத்த 2021 சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட புதிய பொங்கல் வைக்கும் அடுப்பு, பொங்கல் பானைகள், பச்சரிசி, சர்க்கரை, ஜோடி கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மதுரை என்றாலே பாசம், வீரம் தான் என்றும், இரண்டையும் காணவே மதுரை வந்ததாகவும் தெரிவித்தார். சுயமரியாதை மற்றும் சமத்துவத்தை தமிழர்கள் கொண்டாடவே சமத்துவ பொங்கல் கொண்டாடினார் கலைஞர் கருணாநிதி என்றும் பெருமிதம் தெரிவித்தார். இன்னும் மூன்று மாதத்தில் சுயமரியாதையை இழந்த அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி திமுக ஆட்சி அமைக்க சபதமெடுப்போம் என்றும் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply