முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

உதயநிதியின் ‘கலகத் தலைவன்’ – நவ.10ஆம் தேதி இசை வெளியீடு

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத்தலைவன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள புதிய திரைப்படம் ’கலகத்தலைவன்’. இயக்குனர் மகிழ் திருமேனி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ள இப்படத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மையில் இத்திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 10 ஆம் தேதி, மாலை 6.30 மணியளவில் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’மாமன்னன்’ திரைப்படத்தில் உதயநிதி நடித்து வருகிறார். இந்நிலையில் ’கலகத்தலைவன்’ திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

Halley Karthik

Chat GPT-ன் அடுத்த வெர்ஷன் அறிமுகம் : GPT-4ல் அப்படி என்னதான் ஸ்பெஷல்

Web Editor

மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சா: ஒருவர் கைது

Web Editor