அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ’ஜவான்’ படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கான உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் பல வெற்றி படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தயாரித்துள்ளார். ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் இசை உரிமத்தை டீ – சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஜவான் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.







