விருதுநகர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.
விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி புதூர் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமாக பொம்மி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கே இன்று மாலை பட்டாசு தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு மீதம் உள்ள கழிவுகளை எரிக்கும் பணியில் ஆறுமுகம், தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் படுகாயமடைந்த தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







