போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது!

தேனி மாவட்டத்தில் போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டு அச்சடித்த கேரளாவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள 18 ஆம் கால்வாய் பகுதியில் வடக்கு காவல்…

தேனி மாவட்டத்தில் போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டு அச்சடித்த கேரளாவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள 18 ஆம் கால்வாய் பகுதியில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகப்படும்படி கேரளா மாநில பதிவெண் கொண்ட காரை சோதனை செய்தனர். அதில் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம், பாரத்தோடு பகுதியைச் சேர்ந்த முகமது சியாது (41), கோம்பையார் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த பிபின் தோமஸ் (36) ஆகியோர் இருந்தனர்.

இதில் முகமது சியாது ஒரு பத்திர எழுத்தர் எனவும், கேரளாவில் மொண்டி எருமை பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் வைத்திருப்பதாகவும் கூறி அவர் கையில் வைத்திருந்த ரூ.5000 மதிப்பிலான முத்திரைத் தாள் ஒன்றை காண்பித்தார். அதனை போலீசார் ஆய்வு செய்த போது, அது போலி முத்திரைத்தாள் என கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.