ஒரே பாலின ஜோடிகள் தங்களுக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ்வதில் மத்திய அரசு குறுக்கிடாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இதுதொடர்பான மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், டெல்லியில் லோக்மத் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்தார்.
இதையும் படிக்க: மாணவர்களின் வருகையை எகிற வைத்த மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம்..!
அப்போது எந்த பாலினத்தவராக இருந்தாலும் அவர்கள் தங்களுக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொள்ளலாம் என்றும், அதில் மத்திய அரசு தலையிடாது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், திருமணம் செய்துகொள்ள நினைக்கும்போதுதான் பிரச்சனை ஏற்படுகிறது என்றும், மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்களால் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் கிரண் ரிஜிஜூ கூறினார்.
இதற்கு இந்தியாவின் வளமான மற்றும் பழமையான பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் நெறிமுறைகளை கருத்தில் கொண்ட சட்டங்களால் திருமணங்கள் ஆதரிக்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு என்றும் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டார்.
-ம.பவித்ரா