போதைப்பொருள் விற்பனை – நைஜீரிய நாட்டு இளைஞர் உட்பட இரண்டு பேர் கைது!

குன்றத்தூர் அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைப்பொருள் விற்பனை செய்ததாக நைஜீரிய நாட்டு இளைஞர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை குறி…

குன்றத்தூர் அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைப்பொருள் விற்பனை செய்ததாக நைஜீரிய நாட்டு இளைஞர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை குறி வைத்து கொக்கைன் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மாலதி தலைமையில் நடந்த கண்காணிப்பின் போது நைஜீரிய நாட்டு வாலிபர் ஒருவர் குன்றத்தூர் பகுதியில் அடிக்கடி கொக்கைன் சப்ளை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பெங்களூரில் இருந்து சென்னை வந்த 30 வயதுடைய நைஜீரியா நாட்டு வாலிபர் ஆரோன் பெல் என்பவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது பெங்களூரில் இருந்து கொக்கைனை மொத்தமாக வாங்கி வந்து குன்றத்தூர் அருகே தங்கி இருக்கும் சாமுவேல் என்பவரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. சாமுவேல் இதனை குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து 10 கிராம் கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் கொக்கைன் சப்ளை செய்த நைஜீரியா நாட்டு வாலிபர் ஆரோன்பெல் மற்றும் அதனை விற்பனை செய்ய இருந்த சாமுவேல் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.