கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபல் தெரிவித்துள்ளார். மேலும், கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் வெளியில் வரும் போது முககவசம் அணிய வேண்டும் எனவும் வீட்டினை சுத்தமாக வைத்துக்கொள்வதோடு அடிக்கடி கைகளை சுத்தம் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெறுமாறும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் நிலவிவரும் இந்த சூழ்நிலையில், தற்போது இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதது அப்பகுதி மக்களுக்கு கூடுதல் அச்சத்தை ஏற்படுதியுள்ளது.







