சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு 400 காய்ச்சல் முகாமினை தொடங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில்,கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 6,984 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 82,236 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 6,984 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,47,129 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 12,945 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,289 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 49,985 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் கொரோனா காய்ச்சல் முகாம்கள் அமைத்து மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை தி.நகர் ராமேஸ்வரம் தெருவில் உள்ள காய்ச்சல் சிறப்பு முகாமினை பார்வையிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது “நோய் குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் சென்னையில் 12 ஆயிரம் தன்னார்வலர்கள், தலைவலி, காய்ச்சல், நுகர்வு தன்மை இல்லாதது குறித்து வீடு வீடாக ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார். இதனையடுத்து அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் 400 காய்ச்சல் முகாமினை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில். கொரோன அறிகுறி சலி, காய்ச்சல், இருமல், தலைவலி வெளியே தெரியாமலும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஆக்ஸிமீட்டரில் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு 95-க்கும் கீழ் இருந்தால் அவர்களை அருகில் உள்ள காய்ச்சல் முகாமிற்க்கு செல்ல அறிவுறுத்துகிறோம் எனவும் சென்னையில் 12 ஸ்கிரீனிங் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 3 நாட்களில் அனைத்தும் இயக்கப்படும் என்றும் தற்போது 3 ஸ்கிரீனிங் சென்டர்கள் இயங்கி வருவதாகவும்” அவர் தெரிவித்தார்.