புளியந்தோப்பில் தரமற்ற முறையில் கட்டடம்: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

சென்னையில், குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், தரமற்ற வகையில் கட்டப்பட்டுள் ளதாக புகார்கள் எழுந்த நிலையில், 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில், கே.பி. பார்க் என்ற குடிசை மாற்று…

சென்னையில், குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், தரமற்ற வகையில் கட்டப்பட்டுள் ளதாக புகார்கள் எழுந்த நிலையில், 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில், கே.பி. பார்க் என்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கள், பயனாளிகள் பங்களிப்புடன் கட்டப்பட்டது. இந்த குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டுள்ளதாகவும், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, அமைச்சர்கள், அதிகாரிகள் குடியிருப்புக்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த விவகாரம், சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இந்த விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், கட்டடங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணிகள் ஐஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, புளியந்தோப்பு குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு கட்டுமான குறைபாடுகளோ அல்லது தரமற்ற பொருட்களோ காரணமல்ல என அந்த குடியிருப்பை கட்டிய பிஎஸ்டி நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.