முக்கியச் செய்திகள் கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது. 3ஆம் அலையை எதிர்கொள்ள மத்திய – மாநில அரசுகள் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தயாராகி வருகின்றன. அதேபோல கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 36,571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 3,23,58,829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,555 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,15,61,635 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 3,65,605 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 540 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,33,589 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

அதிக ரன்கள்: மிதாலி ராஜ் அபார சாதனை

Gayathri Venkatesan

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன வீரர்கள் சிறைபிடிப்பு

Halley karthi

ராகுல் காந்தியின் 51-வது பிறந்தநாள் இன்று!

Gayathri Venkatesan