ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்
ஜம்மு காஷ்மீரில் குல்கம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் ஜம்மு காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில், பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் பணி நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர்.







