சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு

கொரோனா இரண்டாம் அலை காரணமாக சர்வதேச விமான சேவைக்கான தடையை ஜூலை 31 -ம் தேதி வரை நீட்டித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சிவில் விமானப்…

கொரோனா இரண்டாம் அலை காரணமாக சர்வதேச விமான சேவைக்கான தடையை ஜூலை 31 -ம் தேதி வரை நீட்டித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் விமான சேவைக்கான தடை வரும் ஜூலை 31-ம் தேதி வரை தொடரும் என்றும், ஆனால் சர்வதேச சரக்கு போக்குவரத்து விமான சேவை தற்போதுள்ள நடைமுறையில் தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.